சிகாகோ அருகே ஜூலை நான்காம் திகதி அணிவகுப்பில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டவர், கொடிய துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு இரண்டாவது தாக்குதலைப் பற்றி யோசித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று (புதன்கிழமை) நீதிமன்றத்தில் ஆஜரானபோது, 21 வயது சந்தேக நபரான ரொபர்ட் கிரிமோ, பிணை இல்லாமல் தடுத்து வைக்கப்படுவார் என்று நீதிபதி தீர்ப்பளித்தார் மற்றும் ஒரு பொது வழக்கறிஞரை நியமித்தார்.
மேலும், நீதிமன்ற விசாரணையின் போது, அவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதை ஒப்புக்கொண்டதாகவும் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
சிகாகோ புறநகர்ப் பகுதியான ஹைலேண்ட் பூங்காவில் திங்கள்கிழமை காலை தாக்குதலுக்குப் பிறகு, விஸ்கான்சினில் உள்ள மேடிசனில் கிரிமோ, அங்கு மற்றொரு சுதந்திர தின கொண்டாட்டத்தை பார்த்த அவர், அதை தாக்க நினைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
தப்பியோடிய குடியிருப்பாளர்களுடன் சேர்ந்து ஹைலேண்ட் பூங்காவில் இருந்து தப்பிக்க, தான் ஒரு பெண்ணாக மாறுவேடமிட்டு வந்ததாக துப்பாக்கிதாரி கூறியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சுருக்கமான விசாரணையில், உதவி அரசு வழக்கறிஞர் பென் தில்லன், சந்தேக நபர் அந்த பகுதியை விட்டு வெளியேறி துப்பாக்கியை வீசியதை கண்காணிப்பு காணொளி காட்டுகிறது என கூறினார்.. பின்னர் அவர் தனது தாயின் காரை எடுத்துக்கொண்டு சுமார் 150 மைல்கள் (240 கிமீ) வடமேற்கே மேடிசனுக்குச் சென்றார்.
கடந்த திங்கட்கிழமை, சிகாகோவின் வடக்குக் கரையில் சுமார் 30,000பேர் வசிக்கும் இல்லினாய்ஸ் மாகாணத்தில், சிகாகோ புறநகரில் உள்ள ஹைலேண்ட் பார்க் பகுதியில், அமெரிக்கா உருவான 246ஆவது ஆண்டு தினத்தினை முன்னிட்டு இடம்பெற்ற சுதந்திர தின அணிவகுப்பில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதோடு, குறைந்தது 30பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.