இலங்கைக்கான அவுஸ்ரேலியாவின் புதிய உயர்ஸ்தானிகராக போல் ஸ்டீபன்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் பென்னி வோங்கினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
டேவிட் ஹோலிக்கு பதிலாகவே போல் ஸ்டீபன்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்டீபன்ஸ் இந்தியா மற்றும் இந்து சமுத்திரக் கிளையின் உதவி செயலாளராகவும் பதவி வகித்துள்ளார்.
முன்னதாக அவர், ஸ்வீடன் மற்றும் தாய்லாந்து, பிரேசிலுக்கான தூதுவராகவும், ஐக்கிய நாடுகள் சபைக்கான அவுஸ்ரேலியாவின் நிரந்தர தூதுவராகவும் பணியாற்றினார்.
இந்தநிலையில், 70 வருடங்களில் இல்லாத மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் இலங்கைக்கு உதவியளிக்க அவுஸ்ரேலியா உறுதிபூண்டுள்ளது என அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய 50 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு அவசர உணவு மற்றும் சுகாதார தேவைகளை பூர்த்தி செய்ய வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.