புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டிற்கு அனுப்பும் டொலர்களின் பெறுமதிக்கு அமைய மின்சார வாகன இறக்குமதிக்கான உரிமங்களை வழங்குவதற்கு தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
குறித்த பணியாளர்கள் அனுப்பும் டொலரின் பெறுமதிக்கு அமைய அவர்களுக்கு எவ்வாறான வாகன அனுமதிப்பத்திரம் வழங்கப்படவுள்ளது என்பது தொடர்பில் தற்போது கலந்துரையாடப்பட்டு வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
சட்ட ரீதியாக பணம் அனுப்பும் அனைவருக்கும் இந்த வேலைத்திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட வேண்டும் என அமைச்சர் மனுஷ நாணயக்கார உரிய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
டொலர் தட்டுப்பாடு காரணமாக இலங்கை பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளது.
குறிப்பாக எரிவாயு மற்றும் எரிபொருளை கொள்வனவு செய்வதில் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், டொலரினை நாட்டிற்கு கொண்டுவரும் நோக்கில் இலங்கை அரசாங்கம் இந்த திட்டத்தினை முன்னெடுத்துள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது.