ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதிக்குள் நாளை (08) மற்றும் நாளை மறுதினம் போராட்டக்காரர்கள் பிரவேசிப்பதை தடுக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்குமாறு பொலிஸாரால் விடுக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு மேலதிக நீதவான் கேமிந்த பெரேரா நிராகரித்துள்ளார்.
குற்றம் நடந்தால், அதை எதிர்கொள்வதற்கான அதிகாரம் உள்ளதால், குறித்த கோரிக்கையை நிராகரிப்பதாக நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
கோட்டை பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதியினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்த மேலதிக நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதேவேளை, அமைதியான போராட்டங்களை நடத்த மக்களுக்கு உரிமை உண்டு என பொலிஸ் மா அதிபர் சீ .டீ . விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
அவர்களின் உரிமைகளை பொலிஸார் உறுதி செய்வார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அரச அல்லது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதையும், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதையும் அல்லது அவர்களின் அடிப்படை உரிமைகளைப் பயன்படுத்தும்போது அவர்களுக்கு இடையூறு விளைவிப்பதையும் தவிர்த்துக் கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளார்.