அமைதியான போராட்டக்காரர்களுக்கு இராணுவம் மற்றும் பொலிஸார் இடமளிக்க வேண்டும் என அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்க தூதர் ஜூலி சுங் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.
வன்முறை ஒரு தீர்வாகாது எனவும், போராட்டம் நடத்தப் போகிறீர்கள் என்றால், தயவு செய்து அமைதியாக நடந்து கொள்ளுங்கள் எனவும் அமெரிக்க தூதுவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் அமைதியான போராட்டக்காரர்களுக்கு இராணுவம் மற்றும் பொலிஸார் இடமளிக்க வேண்டும் எனவும், பாதுகாப்பை வழங்கவேண்டும் என நினைவூட்டுகிறேன் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
குழப்பமும், பலப்பிரயோகமும் தற்போதைய நிலையில் இலங்கையர்களுக்கு பொருளாதாரம் அல்லது அரசியல் ஸ்திரத்தன்மையை கொண்டு வராது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.














