ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் மறைவுக்கு உலக தலைவர்கள் இரங்கல் வெளியிட்டுள்ளனர்.
தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக்-யோல் ஜப்பானுக்கு தனது இரங்கலைத் தெரிவித்தார். அபேயை சுட்டுக் கொன்றது ‘மன்னிக்க முடியாத குற்றம்’ என்று விபரித்தார்.
ஜேர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ், தான் மிகவும் சோகமாகவும் திகைப்புடனும் இருப்பதாகக் கூறினார். ‘இந்த கடினமான நேரங்களில் ஜேர்மனி ஜப்பானின் பக்கம் நெருக்கமாக நிற்கும் என்றும் கூறினார்.
ரோமானிய ஜனாதிபதி கிளாஸ் அயோஹானிஸ், அபேவை ஜனநாயகம் மற்றும் பலதரப்புவாதத்தின் வலுவான பாதுகாவலர் மற்றும் உண்மையான நண்பர் என்று விபரித்தார்.
துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன், அபேவை அன்புள்ள நண்பர் என்று அழைத்தார். மேலும் இந்த கொடூரமான தாக்குதலை நடத்தியவர்களை நான் கண்டிக்கிறேன் என கூறினார்.