ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலகினால் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நேற்று ஞாயிற்றுக்கிழமை விளக்கமளித்துள்ளது.
அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தனது இராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் ஒப்படைக்க வேண்டும் என அதன் தலைவர் சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் பதவி வெற்றிடமாக இருக்கும் போது பிரதமர் பதில் ஜனாதிபதியாக பதவியேற்க வேண்டும் என அரசியலமைப்பு கூறுவதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி குறிப்பிட்டார்.
பிரதமரால் ஜனாதிபதியாக செயற்பட முடியாவிட்டால், சபாநாயகர் ஒரு மாத காலத்திற்கு பதில் ஜனாதிபதியாக பதவியேற்கலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அந்த மாதத்திற்குள், வெளியேறும் ஜனாதிபதியின் எஞ்சிய பதவிக் காலத்திற்கு நாடாளுமன்றம் ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் சாலிய பீரிஸ் குறிப்பிட்டார்.