விம்பிள்டன் டென்னிஸ் தொடரின், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், செர்பியாவின் முன்னணி வீரரான நோவக் ஜோகோவிச் வெற்றிபெற்று சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இறுதிப் போட்டியில், செர்பியாவின் முன்னணி வீரரான நோவக் ஜோகோவிச், அவுஸ்ரேலியாவின் நிக் கிர்கியோசை எதிர்கொண்டார்.
எதிர்பார்ப்பு மிக்க இப்போட்டியில், நோவக் ஜோகோவிச், 4-6, 6-3, 6-4, 7-6 என்ற செட் கணக்குகளில் வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை வென்றார். இது அவரது 7 ஆவது விம்பிள்டன் டென்னிஸ் சம்பியன் பட்டமாகும்.
இதேபோல பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், கஸகஸ்தானின் எலெனா ரைபகினா, துனிசியாவின் ஒன்ஸ் ஜபீரை வீழ்த்தி சம்பியன் பட்டத்தை வென்றார்.