வவுனியா சைவப்பிரகாசா மகளீர் கல்லூரியின் ஆரம்ப பாடசாலை வளாகத்துக்குள் துவிச்சக்கரவண்டியொன்று திருடப்பட்டுள்ளது.
பாடசாலையின் வளாகத்திற்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கல்விசாரா உத்தியோகத்தர் ஒருவரின் துவிச்சக்கரவண்டியே இவ்வாறு திருடப்பட்டுள்ளது.
குறித்த உத்தியோகத்தர் அலுவலகத்திற்குள் இருந்தபோது பாடாசாலை வளாகத்திற்குள் வந்த ஒரு நபர், குறித்த உத்தியோகத்தரின் துவிச்சக்கரவண்டியை திருடி செல்லும் சி.சி.டி.வி. காட்சிகளும் கிடைத்துள்ளன.
இது தொடர்பாக வவுனியா பொலிஸில் உரிமையாளர் முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து பொலிசாரால் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறான திருட்டுச்சம்பவங்கள் அண்மைக்காலமாக வவுனியாவில் அதிகமாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.