அயர்லாந்து அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில், நியூஸிலாந்து அணி 31 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
பெல்பாஸ்ட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அயர்லாந்து அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில், 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 173 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதனைத்தொடர்ந்து 174 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய அயர்லாந்து அணி, 18.2 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 142 ஓட்டங்களை பெற்றது. இதனால், நியூஸிலாந்து அணி, 31 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக 52 பந்துகளில் ஒரு சிக்ஸர் 7 பவுண்ரிகள் அடங்களாக 69 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட க்ளேன் பிலிப்ஸ் தெரிவுசெய்யப்பட்டார்.