ஜப்பானும் தென்கொரியாவும் இருதரப்பு உறவை மேம்படுத்த முடிவு செய்துள்ளன. இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பில் இதுகுறித்த உடன்பாடு ஏற்பட்டது.
ஜப்பான் வெளியுறவு அமைச்சர் யோஷிமசா ஹயாசி, தென்கொரிய வெளியுறவு அமைச்சர் பார்க் ஜின் ஆகியோர் நேற்று (திங்கட்கிழமை) டோக்கியோவில் சந்தித்தனர்.
இந்தச் சந்திப்பின்போது, வடகொரியாவிடமிருந்து எழுந்துள்ள அணு ஆயுத அச்சுறுத்தல், ஜப்பானின் காலனித்துவ காலத்தில் தென்கொரிய தொழிலாளர்கள் கட்டாய உழைப்பில் ஈடுபடுத்தப்பட்ட பிரச்னையைத் தீர்ப்பது தொடர்பாக இணைந்து பணியாற்றுவது என முடிவு செய்யப்பட்டது.
இருதரப்பு உறவு, அமெரிக்காவுடனான முத்தரப்பு உறவை மேம்படுத்துவது எனவும் ஒப்புக்கொள்ளப்பட்டதாக இரு நாடுகள் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பயணத்தின்போது, ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபேவின் மறைவுக்கு தென்கொரிய வெளியுறவு அமைச்சர இரங்கல் தெரிவித்தார்.