பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் அரசாங்கம் ஜூலை 18ஆம் திகதி தனக்குத்தானே அழைப்பு விடுத்திருந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது.
ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் உறுப்பினர்கள், தேசியத் தேர்தலைத் தூண்டுவதைத் தவிர்ப்பதற்காக அமைச்சர்களுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
கடந்த 7ஆம் திகதி பிரதமர் பொரிஸ் ஜோன்சன் பதவி விலகியிருந்தாலும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி வலுக்கட்டாயமாக விரைவில் வெளியேற்ற வேண்டுமென வழிமொழிந்தது. ஆனால், பிரதமர் அவர் செல்வதாக ஏற்கனவே கூறியிருப்பதால் இது தேவையற்றது என்று அரசாங்கம் எதிர்த்தது. அதற்குப் பதிலாக பழமைவாதிகள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கைப் பிரேரணையை முன்மொழிந்தனர்.
எனினும், ஜோன்சன் அவராக முன்வந்து, நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அழைப்பு விடுத்து அதற்கான பணிகள் நடைபெற்றன. இதில், நேற்றிரவு நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு பற்றிய விவாதம் அந்நாட்டின் நாடாளுமன்ற வலைதளத்தில் ஒலிபரப்பப்பட்டது.
இதில் அரசாங்கம் 349க்கு 238 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதனால், பிரித்தானியாவில் பொது தேர்தல் நடைபெறுவது தவிர்க்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் தொடக்கத்தில் கன்சர்வேட்டிவ் கட்சியால் புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும் வரை பிரதமர் பொரிஸ் ஜோன்சன் பிரதமராக செயற்படுவார்.