இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு இன்று(புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் நடைபெறுகின்றது.
பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் ஜனாதிபதி பதவிக்காக போட்டியிடுகின்றனர்.
இரகசிய வாக்கெடுப்பே நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்றது.
வாக்கு சீட்டை நாடாளுமன்ற உறுப்பினர்கள் படமெடுத்தால் அவர்களுக்கு ஏழாண்டுகள்வரை நாடாளுமன்றம்வர தடை விதிக்கப்படும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
டலஸ் அழகப்பெருமவுக்கான ஆதரவு வலுத்துள்ளது. 10 இற்கும் மேற்பட்ட கட்சிகள் அவருக்கு நேசக்கரம் நீட்டியுள்ளன.