இலங்கையில் வெற்றியடமாகியுள்ள ஜனாதிபதிப் பதவிக்கு, புதிய ஜனாதிபதியை தெரிவு தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு, இன்று சற்று நேரத்தில் நாடாளுமன்றில் நடைபெறவுள்ளது.
பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் அமைச்சரான டளஸ் அழகப்பெரும, ஜே.வி.பியின் தலைவரான அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர்.
ரகசிய வாக்கெடுப்பின் ஊடாகவே இந்தத் தேர்தல் இன்று நடைபெறவுள்ளது.
இந்த மூன்று தரப்பினரும், இறுதிக்கட்டம்வரை தங்களுக்கான ஆதரவினை அரசியல் கட்சிகளிடமிருந்து பெறும் முயற்சியில் ஈடுபட்டிருந்தநிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்குகளே இந்தத் தேர்தலில் தீர்மானிக்கும் சக்தியாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக இவ்வாறானதொரு முறையில் இடம்பெறும் இந்த ஜனாதிபதித் தேர்தலானது, தேசிய ரீதியாக மட்டுமன்றி, சர்வதேச ரீதியாகவும் கவனத்தை ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.