கலிபோர்னியாவில் வேகமாக நகரும் காட்டுத்தீயின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், அவர்கள் இந்த தீயைக் கட்டுப்படுத்த போராடுகிறார்கள்.
‘ஓக் காட்டுத்தீ’ இப்போது 15,603 ஏக்கர் நிலத்தை எரித்துள்ளது. ஆனால், ஒரு இன்னும் பூஜ்ஜிய சதவீதம் காட்டுத்தீக் கூட கட்டுப்படுத்தப்படவில்லை என்று கலிபோர்னியாவின் தீயணைப்புத் துறை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு தெரிவித்துள்ளது.
ஆனால், காட்டுத்தீ நடவடிக்கை முந்தைய நாட்களைப் போல தீவிரமாக இல்லை. மேலும் தீயணைப்பு வீரர்கள் முன்னேறி வருகின்றனர்.
இதுவரை, 6,000க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் மற்றும் 10 கட்டடங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
மேலும், 3,271 கட்டமைப்புகள் – வீடுகள் மற்றும் வணிகங்கள், அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன என்று கலிபோர்னியா வனவியல் மற்றும் தீ பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு சமூகக் கூட்டத்தில், வெள்ளிக்கிழமை தொடங்கிய தீ, மிக விரைவில் கட்டுப்படுத்தப்படும் என்று நம்புவதாக ஒரு அதிகாரி கூறினார்.
சனிக்கிழமையன்று மரிபோசா கவுண்டியில் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டது, மேலும் இது, தீயை சமாளிக்க சில கூட்டாட்சி உதவிகளை அணுக மாநிலத்தை அனுமதிக்கும்.
மரிபோசா கவுண்டியில் ஞாயிற்றுக்கிழமை வெப்பநிலை 38 செல்சியசை எட்டியது, மேலும் அடுத்த சில நாட்களுக்கு வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.