உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி முன்னிலையில் இந்தியாவின் 15ஆவது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு பதவியேற்றுக்கொண்டார்.
டில்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தியதை அடுத்து பாரம்பரிய முறைப்படி திரௌபதி முர்மு குடியரசுத் தலைவராக பதவியேற்றார்.
நாடாளுமன்ற மண்டபத்தில் நடைபெற்ற இந்த பதவியேற்பு நிகழ்வில் பிரதி குடியரசுத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான வெங்கையா நாயுடுவும் கலந்துகொண்டார்.
மேலும் பிரதமர் நரேந்திர மோடி, மக்களவைத் தலைவர், மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சியினர் ஆளுநர்கள், மாநில முதல்வர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.