ஐக்கிய தேசியக்கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன, நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.
நாடாளுமன்றம் இன்று(புதன்கிழமை) காலை 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது.
இதன்போதே அவர் சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய தேசியக்கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இதனால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கே வஜீர அபேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.