அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பகுதியில் கடலலையில் சிக்கி இழுத்து செல்லபட்டு காணாமல் சென்ற பாடசாலை மாணவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்து.
பெரியதம்பிரான் ஆலய உற்சவ இறுதி நாளான்று, தீர்த்த உற்சவத்தில் நீராடச் சென்ற போது 3 மாணவர்கள் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டனர்.
இரு மாணவர்கள் உயிர் தப்பி கரை சேர்ந்த நிலையில், மற்றுமொரு மாணவன் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்ட நிலையில் காணாமல் போயிருந்தார்.
இவ்வாறு காணாமல் சென்ற பெரிய நீலாவணை பகுதியை சேர்ந்த 16 வயது மதிக்கத்தக்க இராசநாயகம் சனுஜன் என்ற மாணவனின் சடலம் நேற்று கரை ஒதுங்கியுள்ளது.
குறித்த சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு மரண விசாரணைக்காக எடுத்து செல்லப்பட்டுள்ளது.
சடலம் உடல்கூற்று பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளதுடன் சம்பவம் தொடர்பாக பெரிய நீலாவணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.