சுமார் 150 பிரித்தானிய துருப்புக்கள், ஃபின்லாந்தில் உயர் தயார்நிலைப் பயிற்சிக்காக ஃபின்லாந்து மற்றும் அமெரிக்கப் படைகளுடன் இணைந்துள்ளனர்.
நான்கு நாட்கள் பயிற்சியில் மூன்று நாடுகளைச் சேர்ந்த 750 துருப்புக்கள் ஈடுபடுத்தப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஃபின்லாந்து, நேட்டோ இராணுவக் கூட்டணியில் சேருவதற்கான அணுகல் நெறிமுறையில் கையெழுத்திட்ட சில வாரங்களுக்குப் பிறகு, உறுப்பினர் சேர்க்கைக்கான செயல்முறையைத் தொடங்கியுள்ளது.
பல ஆண்டுகளாக நடுநிலை வகிக்கும் ஃபின்லாந்து மற்றும் சுவீடன் ஆகிய நாடுகள் உக்ரைனை ரஷ்யா ஆக்கிரமித்த பிறகு நேட்டோவில் சேர விண்ணப்பித்தன.
ஃபின்லாந்து மற்றும் சுவீடன் நேட்டோவில் இணைவதை ரஷ்யா கடுமையாக எதிர்த்துள்ளது மற்றும் அவ்வாறு இணைந்தால் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடுமென எச்சரித்துள்ளது. ஃபின்லாந்து ரஷ்யாவுடன் 830 மைல் (1,340 கிமீ) எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது.
இப்பயிற்சியின் ஒரு பகுதியாக எஸ்டோனியாவை தளமாகக் கொண்ட பிரித்தானிய துருப்புக்கள், ரோயல் எயார் ஃபோர்ஸ் சினூக் ஹெலிகொப்டர்களில் ஃபின்லாந்துக்கு அனுப்பப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.