ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவின்றி, எந்தவொரு அரசாங்கத்தாலும் ஆட்சி செய்ய முடியாது என்று அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், தற்போது நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் பெரிய கட்சியாக எமது கட்சி காணப்படுகிறது.
இந்த நிலையில், எதிர்க்காலத்தில் நாட்டில் சர்வக்கட்சி அரசாங்கமொன்று அமையுமானால் அதில், எமது கட்சி நிச்சயமாக பங்காளியாக செயற்படும்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு தான் இன்று நாடாளுமன்றில் பெரும்பான்மை பலம் உள்ளது. எமது கட்சியின் ஆதரவு இல்லாமல் எந்தவொரு அரசாங்கத்திற்கும் ஆட்சி செய்ய முடியாது.
இந்த நிலையில், எதிர்க்காலத்தில் எவ்வாறான அரசாங்கம் அமையப்போகிறது என்பதை பார்த்து, நாம் ஜனாதிபதிடன் பேச்சு நடத்தி அடுத்தக்கட்ட நடவடிக்கையை நாம் மேற்கொள்வோம்.- என்றார்.