மேலும் தொடர்ச்சியாக ஆறாவது முறையாக பாங்க் ஒஃப் இங்கிலாந்து வட்டி வீதங்களை உயர்த்தும் சாத்தியம் தென்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் மீதான அதன் சமீபத்திய முடிவை இன்று (வியாழக்கிழமை) பாங்க் ஒஃப் இங்கிலாந்து அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வட்டி வீதங்கள் தற்போது 1.25 சதவீதமாக உள்ளது, ஆனால் மத்திய வங்கி அவற்றை 1.75 சதவீதம் வரை அதிகரிக்கலாம். அப்படியானால், 2008ஆம் ஆண்டு டிசம்பருக்குப் பிறகு இதுவே அதிகபட்சமாக இருக்கும்.
விலைகள் அதிகரிக்கும் வீதத்தை குறைக்க வங்கி நம்புகிறது. இந்த ஆண்டின் பிற்பகுதியில் பணவீக்கம் 11 சதவீதம் ஆகலாம் என்று எச்சரித்துள்ளது.
கொவிட் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதால், நுகர்வோர் அதிகமாகச் செலவழிப்பதால், உலகம் முழுவதும் விலைகள் விரைவாக அதிகரித்து வருகின்றன.
பல நிறுவனங்கள் விற்க போதுமான பொருட்களைப் பெறுவதில் சிக்கல்கள் உள்ளன. மேலும் வாங்குபவர்கள் மிகக் குறைவான பொருட்களைத் துரத்துவதால், விலைகள் உயர்ந்துள்ளன.
எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகளில் மிகக் கூர்மையான உயர்வு ஏற்பட்டுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பால் பிரச்சனை மோசமடைந்தது.
2008ஆம் ஆண்டின் உலகளாவிய நிதி நெருக்கடியிலிருந்து, இங்கிலாந்து வட்டி வீதங்கள் வரலாற்று ரீதியாக குறைந்த மட்டத்தில் உள்ளன. கடந்த ஆண்டு, அவை 0.1 சதவீம் ஆக இருந்தது.