இந்தியாவின் புதிய துணை குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ளது.
ஜக்தீப் தன்கர், மார்கரெட் ஆல்வா ஆகியோர் போட்டியிடும் இத்தேர்தலில், இன்று மாலை முடிவு அறிவிக்கப்பட உள்ளது.
வெங்கைய நாயுடுவின் பதவிக் காலம் எதிர்வரும் 10 ஆம் திகதியுடன் நிறைவடைவதால், அடுத்த துணை குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது.
பாஜக தலைமையிலான கூட்டணி சார்பில் மேற்கு வங்க ஆளுநராக இருந்த ஜெகதீப் தன்கரும், காங்கிரசின் முன்னாள் மத்திய அமைச்சர் மார்கரெட் ஆல்வாவும் போட்டியிடுகின்றனர்.
இன்று நடைபெறும் வாக்குப்பதிவில், மக்களவை மற்றும் மாநிலங்களவையின் 788 உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.