தொழிலாளர்களின் ஊதியத்திற்காக கூடுதலாக 140 மில்லியன் பவுண்டுகளை உள்ளூர் சபைகளுக்கு வழங்க ஸ்கொட்லாந்து அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
துணைப் முதலமைச்சர் ஜோன் ஸ்வின்னி, உள்ளூர் அதிகார சபையான கோஸ்லாவுடன் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்த கூடுதல் நிதியுதவியை அறிவித்தார்.
பாடசாலைகள், ஆரம்ப பாடசாலைகள், கழிவுகள் மற்றும் மறுசுழற்சி மையங்களில் உள்ள ஊழியர்கள் 2 சதவீத ஊதிய சலுகையை நிராகரித்த பின்னர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர்.
இந்த நிலையில், யுனைட், யூனிசன் மற்றும் ஜிஎம்பி தொழிற்சங்கங்களின் உறுப்பினர்களின் தொழில்துறை நடவடிக்கையின் வாய்ப்பு குறித்து விவாதிக்க கோஸ்லாவின் தலைவர்கள் நேற்று (வெள்ளிக்கிழமை) சந்தித்தனர்.
இதன்போது சபைத் தலைவர்கள், தங்களுக்கு கூடுதல் தகவல்கள் தேவை என்று முடிவு செய்து, அடுத்த வாரம் மீண்டும் கூடுவதாக தெரிவித்தனர்.