ஊழல்,மோசடிகள், தவறான தீர்மானங்கள், தனிபரிடத்தில் குவிந்த அளவுக்கு அதிகமான அதிகாரங்களால் இலங்கையின் பொருளாதாரம் அதலபாதாளத்திற்குள் சென்றது.
தற்போது, மீளமுடியாத நிலைமையில் பெரும் நெருக்கடிக்குள் சிக்கித்தவித்து வருகின்றது. இந்த நிலையில் உள்நாட்டில் அத்தியாவசியமான பொருட்களுக்கான தட்டுப்பாடுகள், தீவிரமடையும் வறுமை ஆகியவற்றால் மக்கள் போராட்டங்களும் தீவிரம் பெற்று வருகின்றன.
இந்த நிலைமையில் பிராந்தியத்தின் முதன்மை நாடாக இருக்கும் இந்தியா, கடன்சலுகைகள் மூலமாக 3.5பில்லியன் டொலர்கள் இதுவரையில் வழங்கியுள்ளது.
அத்துடன், நன்கொடைகள் மூலமாகவும் தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பல பிராந்தியங்களில் இருந்தும் அத்தியாவசியப்பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இவ்விதமான சூழலில் இலங்கை அரசாங்கம் தனது நீண்டநாள் கடன்பெறுநரான சீனாவிடத்தில் 2.5பில்லியன் டொலர்களை அவசர உதவியாக கோரியது. ஆனால் அதற்கு பீஜிங் எவ்விதமான பதலளிப்புக்களையும் செய்யவில்லை.
மாறாக, ஏற்கனவே வழங்கப்பட்ட கடன்களை எவ்வாறு மீளப்பெறுவது என்பது பற்றிய விடயத்திலேயே சீனா தீவிரமான அக்கறையைச் செலுத்தியது.
அத்துடன், துறைமுக நகர அபிவிருத்தி திட்டத்தினை எவ்வாறு தொடர்ந்தும் முன்னெடுப்பது பற்றியும் தான் கரிசனை கொண்டிருந்தது.
இந்த நிலையில், இலங்கையானது, வெளிநாட்டுக்கடன்களை மீளச்செலுத்தமுடியாத நிலைமையால் அனைத்துக்கடன்களை மறு அறிவித்தல் வரையில் மீளச் செலுத்தப்போவதில்லை என்று அறிவித்தது.
இது சீனாவிற்கு குழப்பத்தினை ஏற்படுத்தியது என்பது வெளிப்படையான விடயம். இவ்விதமான நிலைமையால், இலங்கைக்கு மேலதிக கடன்களை வழங்குவதற்கு சீனா முன்வரவில்லை. முதலீடுகளை மேற்கொள்வதற்கு தயாராகவில்லை.
ஆனால், தான் வழங்கிய பழைய கடன்களை பயன்படுத்தி இலங்கையை தனது பிடிக்குள் வைத்திருப்பதற்கு தீவிரமான முயற்சிகளை சீனா எடுத்திருந்தது. குறிப்பாக, உள்நாட்டுக் குழப்பங்களுக்கு திரைமறைவில் இருந்து செயற்பட்டதாகவும் தகவல்கள் உள்ளன.
எவ்வாறாயினும், தற்போது, சீனா, இந்து மா சமுத்திரத்தினுள் தனது உளவு பார்க்கும் யுவான் வாங்-5 என்ற கப்பலுடன் பிரவேசிக்கப்போகவுள்ளது.
எதிர்வரும் 11ஆம் திகதி அம்பாந்தோட்டை துறைமுகத்தினை அடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த நிலையில் இந்தக் கப்பலின் பிரவேசம் இந்திய, இலங்கை உறவுகள் இடையே கசப்பான நிலைமைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே கப்பலின் நிகழ்ச்சித்திட்டத்தினை அறிந்த இந்தியா ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டவர்களுக்கு தமது ஆழ்ந்த கரிசனையை வெளிப்படுத்தியுள்ளது.
எவ்வாறாயினும் இலங்கை அரசாங்கமானது, தற்போது சீனக் கப்பலுக்கான அனுமதியை அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை, நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது சீனக்கப்பலுக்கான அனுமதியை அழிப்பதாகவும் அறிவித்துள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் பந்துல குணவர்த்த, ‘அமைச்சரவை, சீனக்கப்பலுக்கு அனுமதி வழங்கியதாக கூறியுள்ளர்h.
இதன்மூலம் சீனக் கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தருவது உறுதிப்பட்டுள்ளது. மேலும், அங்கு தரித்து நின்று விண்ணாய்வுகளைச் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் எதிர்காலத்தினை மைப்படுத்தியே சீனக் கப்பலின் விஜயம் இருப்பதாக கூறப்பட்டாலும், நாட்டில் மோசமடைந்து வரும் பொருளாதாரநெருக்கடிக்குள், இலங்கையால் ஆகக்குறைந்தது ஒரு ஏவுகணைப் பரிசோதனையை செய்ய முடியாத கையறு நிலையில் தான் உள்ளது.
அவ்விதமான நிலையில், ஏவுகணைப் பரிசோதனையையோ அல்லது, விண்வெளி ஆய்வுகளியோல இலங்கை ஈடுபடும் என எதிர்பார்ப்பது வேடிக்கையானது போய்விடும்.
ஆகவே, இராஜதந்திரியான தயான் ஜயத்திலக குறிப்பிட்டுள்ளது போன்று, சீனாவின் கப்பலானது அம்பாந்தோட்டை துறைமுகத்திற் பிரவேசிப்பதானது, இரட்டை நோக்கங்களைக் கொண்டது என்பதாகும்.
அதில், முதலாவது, இந்தியாவின் தென்பிராந்தியங்களை கண்காணிப்புக்கள் உட்படுத்துவதாககும். இது, இந்தியாவின் இறைமைக்கு பகிரங்கமாக விடுக்கப்படும் சவாலாகும்.
ஆகவே இந்தியாவைப் பொறுத்தவரையில், இந்தக் கப்பலை இலங்கையில் திரத்து நிறுத்துவதற்கு இடமளிக்ககூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றது.
ஆனால், தற்போது, இலங்கை, இந்தியாவைக் கடந்து சீனக் கப்பலுக்கு அனுமதியளிப்பதாக தீர்மானம் எடுத்துவிட்டது.
இதனால் தனது நாட்டிற்கு அனைத்து நெருக்கடியான நிலைமைகளின் போது உதவிய இந்தியாவை கைவிட்டுச் செல்லும் பாதையில் முதலடி எடுத்து வைத்துள்ளது.
இந்தப் பாதையில் பயணிப்பது பயங்கரமான ஆபத்தானது. ஏனென்றால் இந்த மாத இறுதியில் இலங்கையின் பணவீக்கமானது 75 முதல் 80சதவீதம் வரையில் அதிகரிக்கலாம் என்று மத்தியவங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கை அடுத்த நான்காண்டுகள் தப்பிப்பிழைப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் கடன்களையே நம்பியிருக்கின்றது.
இந்தக் கடன்களை வழங்குவதற்கான பொறுப்பாளியாக இருக்கப்போவது இந்தியாவே.
அதேநேரம், இந்தியா அடுத்தகட்டமாக இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக முதலீடுகளையும் தாரளமாக வழங்கவுள்ளது.
சுற்றுலாத்துறையிலும் 500வரையிலான முலீட்டாளர்கள் முதலீடுகளைச் செய்வதற்கு முன்வந்துள்ளார்கள்.
இவ்விதமான நிலையில் இந்தியாவிற்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் செயற்பாடுகளுக்கு துணைபோவதால் இந்த செயற்பாடுகள் அனைத்தும் தடைப்படலாம் அல்லது தாமதமாகலாம்.
இதனால், இலங்கையின் நெருக்கடிகள் மிகவும் உக்கிரமடையும் சூழல்களே தோற்றம் பெறும். அதேநேரம், இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் காணப்படுகின்ற வரலாற்று ரீதியான பாரம்பரிய உறவுகளும் பாதிப்படையும். இது, இலங்கைக்கே, பின்னடைவுகளை ஏற்படுத்துவதாக இருக்கும்.
ஆகவே, சீனக்கப்பலுக்கு இலங்கை அனுமதி அளிப்பதன் ஊடாக எதிர்மறையான பயணத்தினை முன்னெடுப்பதற்கே இலங்கை தயாராகி வருகின்றது என்றே கொள்ள வேண்டியுள்ளது.
இந்த எதிர்மறையான பயணத்தை கைவிடுவதற்கு இலங்கை முதலில் துணிய வேண்டும்.
சீனாவின், கடன்பொறிக்குள் இலங்கை சிக்கியுள்ளது என்பது உண்மையானது தான். சீனா அதனைப் பயன்படுத்தி நலன்களை சாதிக்க விளைவதும் அனைவரும் அறிந்தது.
ஆனால், அதிலிருந்து மீட்சி அடைவதற்கு உள்ள வாயிலை அடைப்பதானது இலங்கை பொன்முட்டையிடும் வாத்தை வெட்டிப்பார்ப்பதற்கு சமனானதாகும்.
இதேவேளை, ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்ட சீனாவின் செயற்கைக்கோள் கண்காணிப்புக் கப்பலான யுவான் வாங் 5 (YuanWang 5) கப்பலின் வருகையை மீள்பரிசீலனை செய்யுமாறு இலங்கை அரசாங்கம் சீனாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது.