1987ஆம் ஆண்டு கையெழுத்தான இந்திய-இலங்கை உடன்படிக்கையை, இலங்கை அரசாங்கம் உரியமுறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இந்த உடன்படிக்கை, இலங்கை அரசாங்கத்தால் மதிக்கப்படுவதை மத்திய அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
1987ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி இந்திய ஒற்றுமை மற்றும் பாதுகாப்புக்கு எதிரான செயல்களுக்கு இலங்கை மண் பயன்படுத்தக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை சீனாவின் இராணுவ கப்பலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்த அனுமதி வழங்காத இலங்கை அரசாங்கத்தின் முடிவையும் அன்புமணி ராமதாஸ் வரவேற்றுள்ளார்.