போராட்டங்களில் கலந்து கொண்ட போதும் நீதிமன்ற உத்தரவை மீறவில்லை என தொழிற்சங்கங்களின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.
தொழிற்சங்கத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும், பொய்யான குற்றச்சாட்டுகள் மற்றும் கருத்துக்களை பரப்பக்கூடாது என்றும் கூறியுனார்.
ஸ்டாலினும் அவரும் ஒரே கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றபோதும் தன்னை ஏன் கைது செய்யவில்லை என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன என்றும் தெரிவித்தார்.
இருப்பினும் ஆட்சியை மாற்றக் கோரி மே 28ஆம் தேதி ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்ட போதும் அந்த கண்டனப் பேரணியில் ஜோசப் ஸ்டாலின் கலந்துகொள்ளவில்லை என்றார்.
போராட்டக்காரர்களுக்கு சில வீதிகளிற்குள் செல்லக்கூடாது என நீதிமன்ற உத்தரவு இருந்தபோதும் அந்த உத்தரவை மீறிய குழுவில் ஸ்டாலினும் இருந்தார் என தெரிவித்தார்.