22ஆவது திருத்தத்தின் பிரகாரம் அரசியலமைப்புச் சபைக்கான உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரத்தை நாடாளுமன்றத்திற்கு மாற்ற அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை எதிர்ப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
முன்னதாக அந்த நியமனங்களை வழங்கும் அதிகாரம் பிரதமருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இருந்ததாக அக்கட்சியின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றத்தில் அரசாங்கத்திற்கு பெரும்பான்மை பலம் இருப்பதால், அனைத்து உறுப்பினர்களையும் அவர்களே நியமிக்க முடியும் என்றும் ரஞ்சித் மத்துமபண்டார குற்றம் சாட்டினார்.
10 உறுப்பினர்களைக் கொண்ட அரசியலமைப்புச் சபையானது ஏழு உறுப்பினர்களை நாடாளுமன்றத்திற்குள்ளும் மூன்று உறுப்பினர்களை வெளியிலிருந்தும் நியமிக்கும்.
இருப்பினும் 22வது திருத்த சட்டமூலத்தில் 19வது அரசியலமைப்பின் ஜனநாயக அம்சங்கள் இழக்கப்பட்டுள்ளதாக ரஞ்சித் மத்துமபண்டார மேலும் தெரிவித்தார்.