இலங்கை பொது கடனின் அளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 104.6 வீதமாக அதிகரித்துள்ளது.
2018-2022ஆம் ஆண்டுக்கான நிதி முகாமைத்துவம் மற்றும் பொது கடன் கட்டுப்பாடு தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கையின் விசாரணைகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
டிசம்பர் 31, 2019ஆம் திகதி வரை காணப்பட்ட மொத்த 86.8 வீத பொது கடன், கடந்த 2 ஆண்டுகளில் 17.8 வீத வலுவான வளர்ச்சியைக் காண்பிப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டின் இறுதியிலிருந்து, கடன் தர மதிப்பீட்டு நிறுவனங்களால் கடன் மதிப்பீடுகளை படிப்படியாகக் குறைப்பது தொடர்பான நிலைமையைத் தணிப்பதற்கு மத்திய வங்கி அல்லது நிதி அமைச்சு போதுமான அக்கறை எடுக்கவில்லை அல்லது போதுமான மற்றும் பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்கவில்லை என தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் தனிநபர் கடனின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் 2010ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2021ஆம் ஆண்டில் 257 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.