பிரித்தானியாவில் கடந்த சில நாட்களாக நிலவிய கடுமையான வெப்ப அலை, தற்போது, இடியுடன் கூடிய மழையுடன் முடிவுக்கு வந்துள்ளது.
ஸ்கொட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மழை மற்றும் குறைந்த வெப்பநிலை பதிவானது.
இதேபோல, ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் வடமேற்கு இங்கிலாந்தின் சில பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியது.
மேலும், இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் பிற பகுதிகளில் இன்று (திங்கள்கிழமை) மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இதனிடையே, இங்கிலாந்தின் சில பகுதிகளில் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்ட வறட்சியை முடிவுக்குக் கொண்டுவர நீண்ட மழை தேவைப்படும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
கடந்த 1935ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் மிகவும் வறண்ட மாதமாக கடந்த ஜூலை மாதம் திகழ்கிறது. நாட்டின் சில பகுதிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு ஜூலையில் வறட்சி நிலவியது.