யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் பயிலும் 14 வயது மாணவர் ஒருவர், அதிபரின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலால் காயடைடைந்த மாணவன் தொடர்பாக யாழ்ப்பாணம் மாவட்ட சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தற்போது விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
நேற்று கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையிலேயே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிபரினால் கூறப்பட்ட வேலையை குறித்த மாணவன் செய்யாத காரணத்தினாலேயே, அதிபர் இவரை கடுமையாகத் தாக்கியுள்ளார் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், மாணவனுக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டதுடன் உடல், உள ரீதியாக இவர் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை, பொலிஸ் புலனாய்வுப் பிரிவும் இந்தச் சம்பவம் தொடர்பாக அறிக்கையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.