60 ஆண்டுகளில் முதல் முறையாக வெளிநாட்டு முதலீட்டாளர்களை மொத்த மற்றும் சில்லறை வர்த்தகத்தில் அனுமதிப்பதாக கியூபா அறிவித்துள்ளது.
கம்யூனிஸ்ட் நாடான கியூபாவில் சில்லறை வர்த்தகத்தை தேசியமயமாக்கும் பிடல் கஸ்ட்ரோவின் கொள்கையை மாற்றியமைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பல தசாப்தங்களில் இல்லாதவகையில் மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள கியூபாவில் விலைவாசி உயர்வு பொதுமக்களின் அதிருப்திக்குள்ளாகியுள்ளது.
உணவு மற்றும் மருந்து போன்ற அடிப்படைப் பொருட்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கியூபாவை தளமாகக் கொண்ட மொத்த விற்பனையாளர்களை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ வைத்திருக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.