நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் மாத்திரம் 17 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்க விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து, இந்தியா, கனடா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளே அதிகளவில் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக தினமும் ஆயிரத்து 600 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தருவதாகவும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
மே மாதத்தில் தினசரி சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 650 ஆக இருந்ததாகவும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்க விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.