ஜனாதிபதி மாளிகையில் இருந்து காணாமல் போன மற்றும் சேதமாக்கப்பட்ட பொருட்கள் தொடர்பான அறிக்கை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதியின் செயலாளர் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனுர மனதுங்க தெரிவித்துள்ளார்.
தொல்பொருள் திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி செயலகத்தினால் உரிய பட்டியல் தங்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜூலை 9ஆம் திகதி, போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்ததன் பின்னர், சில பொருட்கள் காணாமல் போயிருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அத்துடன், பல மதிப்புமிக்க நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்தநிலையில், பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு மேலதிகமாக, தொல்பொருள் திணைக்களம் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.