கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புடையதும் தொண்மை வாய்ந்ததுமான மகா துறவி சுவாமி ஓங்காரானந்த சரஸ்வதியால் ஸ்தாபிக்கப்பட்ட மட்டக்களப்பு கல்லடி ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவ பெருவிழா நேற்று புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
நேற்று காலை மட்டக்களப்பு அரசடியில் உள்ள சித்திவிக்னேஸ்வரர் ஆலயத்தில் இருந்து கொடிச்சீலை திருச்செந்தூர் முருகன் ஆலயத்தினை வந்தடைந்ததும் விசேட யாக பூசைகள் இடம்பெற்றுன.
ஆலயத்தில் மூலமூர்த்திக்கு அபிசேக ஆராதனைகள் இடம்பெற்றதனைத் தொடர்ந்து கொடியேற்றம் இடம்பெற்று, விசேட ஆராதனைகள் மற்றும் கொடிக்கம்ப அபிசேக ஆராதனைகளும் நடைபெற்றன.
கொடியேற்றத்தினை தொடர்ந்து முதல் எட்டு நாட்கள் திருவிழாவில் நாளாந்தம் சுவாமி உள்வீதி வெளிவீதியுலா என்பன இடம்பெற்று, ஒன்பதாம் நாளாகிய எதிர்வரும் 25 ஆம் திகதி வியாழக்கிழமையன்று தேர்த்திருவிழா இடம்பெறவுள்ளது.
மேலும், பத்தாம் நாளாகிய 26 ஆம் திகதியன்று வங்கக் கடலில் சமுத்திர தீர்த்தோற்சவம் இடம்பெற்று இவ்வாண்டிற்கான மஹோற்சவ பெருவிழா இனிதே நிறைவடையவுள்ளது.
ஆகம முறைப்படி இலங்கையில் அமைக்கப்பட்ட ஆலயங்களில் தமிழ் மொழியில் வேத பாராயணங்கள் ஓதப்பட்டு முருகப்பெருமானிற்கு பூசை வழிபாடுகள் இடம்பெறும் ஒரேயொரு ஆலயமாக இவ்வாலயமாக இவ்வாலயம் திகழ்கிறது.
இந்தியாவின் புகழ்பூத்த முருகன் ஆலயமான திருச்செந்தூர் ஆலயத்தினை நோக்கியதாக இந்த ஆலயம் அமைக்கப்பட்டுள்ளதும் சிறப்பம்சமாகும்.