தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் அடுத்த வாரம் விடுதலை செய்யப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஞ்சன் ராமநாயக்க தொடர்பான அனைத்து பரிந்துரைகளையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்துள்ளதாக நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ரஞ்சன் ராமநாயக்க, குற்றம் தொடர்பான மன்னிப்புக் கடிதத்தில் அண்மையில் கையொப்பமிட்டார்.
ரஞ்சன் ராமநாயக்கவை ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யுமாறு எதிர்க்கட்சிகள், கலைஞர்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் தொடர்ந்தும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.