நான்காவது கொவிட் தடுப்பூசியை விரைவாக செலுத்திக் கொள்ளுமாறு பொதுமக்களை சுகாதார அமைச்சு அறிவுத்தியுள்ளது.
இதேவேளை நாட்டில் குறைந்த எண்ணிக்கையிலான மக்களே நான்காவது தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளதாகவும், மூன்றாவது தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாதவர்கள் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் வலியுறுத்தியுள்ளார்
மேலும் நான்காவது தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு பக்க விளைவுகள் ஏதும் ஏற்பட்டதாக இதுவரை பதிவாகவில்லை என்பதோடு நாளாந்தம் 100 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர் எனவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.