ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க துருப்புக்கள் திரும்பப் பெறப்படுவதற்கு முன்னர் அமெரிக்கா-தலிபான் ஒப்பந்தம் போடப்பட்ட போதிலும், காபூலின் மையப்பகுதியில் அல்-கொய்தா தலைவர் அய்மன்-அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பயங்கரவாதிகளுக்கான இருப்பிட விபரங்களை வழங்குவதில் பாகிஸ்தானுக்கு பங்கு உள்ளதா என்ற கேள்விகள் அமெரிக்காவால் எழுப்பப்படுகின்றன.
பாக்கிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வா, சர்வதேச நாணய நிதியத்திடம் கடனை முன்கூட்டியே வழங்க அமெரிக்காவிடம் உதவி கோரினார்.
அத்துடன், அவர், அமெரிக்க வெளியுறவுத்துறை துணைச் செயலர் வெண்டி ஷெர்மனுடன் மிகவும் அசாதாரணமான முறையில் தொலைபேசியில் உரையாடியதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானில் வெளிநாட்டுக் கையிருப்புக் குறைந்துள்ளமையால் பொருளாதாரச் சிக்கல் மேலும் அதிகரிக்கும் ஆபாயமான நேரத்தில் நாட்டை இருந்து மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஜெனரல் பாஜ்வா அமெரிக்காவிடம் ஒத்துழைப்புக்களை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்நிலையில், அல்கொய்தா தலைவரின் இருப்பிடத்தை பாகிஸ்தான் வெளிப்படுத்தியதற்கு ஈடாக பாக்கிஸ்தானின் அவசரக் கடனுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்தது என்று டைம்ஸ் ஒஃப் இஸ்ரேலில் தெரிவித்துள்ளது.
ஜவாஹிரியை ஒப்படைக்குமாறு பாஜ்வாவை கட்டாயப்படுத்துவது அமெரிக்காவுக்கு வசதியாக இருந்தாகவும், அதேநேரத்தில் பாகிஸ்தானை அதன் ஈடுபாட்டிற்கு பொறுப்பேற்கவில்லையா எனவும் கேள்விகள் உள்ளன.
அதேபோல், பாகிஸ்தான் இராணுவம் வர்த்தக ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டால், எதிர்காலத்தில் எவ்வாறான செயற்பாடுகுளை முன்னெடுக்கும் என்ற கவலைகளும் உள்ளன.
அமெரிக்கன் எண்டர்பிரைஸ் இன்ஸ்டிட்யூட்டில் மூத்த உறுப்பினரான மைக்கேல் ரூபின், டைம்ஸ் ஒஃப் இஸ்ரேலில், ஜவாஹிரியின் இல்லத்திற்குள் இரண்டு ஏவுகணைகளை வீசிய ட்ரோன் எங்கிருந்து பறந்தது என்பது உறுதியாகத் தெரியவில்லை.
அமெரிக்க ஆளில்லா விமானம் பாகிஸ்தானில் இருந்து பறந்து சென்றால், ஜவாஹிரியின் கொலையில் பஜ்வாவுக்கு தொடர்பு இருப்பது மிகத் தெளிவாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பயங்கரவாதத்திற்கான தொடர்ச்சியான ஆதரவிலிருக்கும் பாகிஸ்தானை பணம் சம்பாதிப்பதற்கு அனுமதிக்கும் போது பைடன் நிர்வாகம் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும், அல்கொய்தாவின் அனைத்து சொத்துகளையும் உடனடியாக வழங்குமாறு பாகிஸ்தானை எச்சரிக்க வேண்டிய நேரம் இதுவாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், பயங்கரவாதத்தை எதிர்க்கும் போது, பாகிஸ்தான் அதன் 2015 தேசிய செயல் திட்டத்தில் கடினமான அம்சங்களில் வரையறுக்கப்பட்ட முன்னேற்றத்தை அடைந்தது.
குறிப்பாக அனைத்து பயங்கரவாத அமைப்புகளையும் தாமதமின்றி அல்லது பாகுபாடு இல்லாமல் அகற்றுவதற்கான உறுதிமொழியை வழங்கியது.
2018 ஜூன் முதல் பயங்கரவாத நிதி மற்றும் பணமோசடி எதிர்ப்பு ஆட்சிகளில் உள்ள குறைபாடுகளுக்காக பாரிஸை தளமாகக் கொண்ட உலகளாவிய பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதி கண்காணிப்புக் குழுவின் சாம்பல் பட்டியலில் பாகிஸ்தான் உள்ளது.