பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக ஐக்கிய காஷ்மீர் மக்கள் தேசியக் கட்சி இங்கிலாந்தின் லீட்ஸில் ‘சர்வதேச காஷ்மீர் மாநாட்டை’ ஏற்பாடு செய்திருந்தது.
காஷ்மீர் தேசிய மனித உரிமை ஆர்வலர்கள், சிந்தனையாளர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பிற புலம்பெயர் பிரமுகர்கள் ஆகியோர் இந்த மாநாட்டில் பங்கேற்றிருந்தனர்.
ஜம்மு காஷ்மீரின் மாநிலமானது அரசியலமைப்புக்குள் ஒருங்கிணைப்பு, அதன் ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பு ஆகியன தொடர்பிலும் இந்த மாநாட்டில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மாநாட்டில் உரையாற்றியவர்கள், ஒன்றுகூடி போராட்டம் நடத்தும் உரிமை என்பது அடிப்படை மனித உரிமை, அதை ஒடுக்கவோ, மக்களிடமிருந்து பறிக்கவோ முடியாது.
அநியாயம், அபரிமிதமான பணவீக்கம், மின்சாரம் பற்றாக்குறை, அதிக வரிகள் ஆகியவற்றுக்கு எதிராக போராடும் மக்களை துப்பாக்கியால் அமைதிப்படுத்த முடியாது என்று வலியுறுத்தப்பட்டது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் மக்கள் 1947 ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு, வன்முறை மற்றும் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை மாநாடு உறுதிப்படுத்தியது. பிரிவினையின் துன்பம் முடிவுக்கு வர வேண்டும்.
இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பதும், இமயமலையின் சுற்றுச்சூழல் அமைப்பை சேதப்படுத்துவதும், மெகா அணைகளைக் கட்டுவது மற்றும் நதிகளின் நீரோட்டத்தைத் திசைதிருப்புவது பெரும் மீள்குடியேற்றத்தை ஏற்படுத்துகின்றமை உள்ளிட்ட விடயங்கள் மக்களுக்கு சிரமங்களை ஏற்படுத்துகிறது.
விலைவாசி உயர்வு, மின்சாரம் பற்றாக்குறை, சுத்தமான குடிநீர் பற்றாக்குறை மற்றும் இயற்கை வளங்களை திட்டமிட்டு சுரண்டுவதற்கு எதிராக நிராயுதபாணியான அமைதியான போராட்டக்காரர்கள் மீது பாகிஸ்தான் துருப்புக்கள் நடத்திய கொடூரத்தை மாநாடு வன்மையாகக் கண்டித்தது.
1962-1963 முதல் சீனாவின் ஆக்கிரமிப்பு கட்டுப்பாட்டில் உள்ள நிலப்பரப்பு தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. பாகிஸ்தான் மற்றும் சீனாவின் ஆக்கிரமிப்புப் படைகள் ஜேம்மு காஷ்மீரை விட்டு வெளியேறி சர்ச்சைக்கு அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும் என மாநாட்டில் பங்கேற்ற அனைவரும் வலியுறுத்தினார்கள்.