நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தலைமையிலான 10 பேர் கொண்ட ஆளும்கட்சி உறுப்பினர்கள் அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் தொடர்பில் தமது நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை.
எவ்வாறாயினும் ஒருதலைபட்சமாக எடுக்கப்படும் ஆளும்கட்சியின் தீர்மானத்தை பின்பற்ற வேண்டிய அவசியம் தமக்கு இல்லை என அக்கூட்டணியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட சில உறுப்பினர்களின் பங்கேற்புடன் எடுக்கப்பட்ட முடிவுகளை கட்சியின் உத்தியோகபூர்வ நிலைப்பாடாக பொதுஜன பெரமுன அறிவிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பின் போதும் இவ்வாறானதொரு நடைமுறையே பின்பற்றப்பட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா சுட்டிக்காட்டினார்.
இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்கும் 22 ஆவது திருத்ததிற்கு எதிராக ஆளும்கட்சி உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.