தெற்கு உக்ரைனில் உள்ள ஸபோரிஷியா அணுமின் நிலையத்திலிருந்து வெளியேற முடியாது என ரஷ்யா தெரிவித்துள்ளது.
ஐ.நா.அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு, ஸபோரிஷியா அணுமின் நிலைய வளாகத்தை இராணுவமற்ற பகுதியாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இதனை ரஷ்யா நிராகரித்துள்ளது.
இதுகுறித்து ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் தகவல் மற்றும் செய்திப் பிரிவு இணை இயக்குநர் இவான் நெசயெவ் கூறுகையில்,
‘உக்ரைனின் ஸபோரிஷியா நகரிலுள்ள அணு மின் நிலையத்தைஇ ராணுவமற்ற பகுதியாக்க வேண்டும் என்று ஐ.நா.வும் பிற நாடுகளும் விடுக்கும் கோரிக்கை நிறைவேற்ற முடியாதது ஆகும்.
அவ்வாறு அந்தப் பகுதியா இராணுவமற்ற பகுதியாக்க வேண்டுமென்றால், அங்கிருந்து ரஷ்யப் படையினர் வெளியேற வேண்டியிருக்கும். உக்ரைன் படையினரும் அங்கு செல்லாமல் இருக்க வேண்டும்.
ஆனால், இது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது ஆகும். ஸபோரிஷியா அணு மின் நிலையத்தை இராணுவமற்ற பகுதியாக்கும் நடவடிக்கை அமுல்படுத்தப்பட்டால், அது இப்போது உள்ளதைவிட அந்த அணுசக்தி மையத்தை மேலும் அபாய நிலைக்குத் தள்ளிவிடும்’ என கூறினார்.
ரஷ்ய ஆக்கிரமிப்பு ஸபோரிஷியா அணுசக்தி வளாகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்ய ஐ.நா அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.