ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய பதவிகளில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக அதன் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் நடைபெறவுள்ள கட்சி மாநாட்டின் போது இதுகுறித்த உத்தியோகப்பூர்வ அறிவித்தல் வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கடந்த காலங்களில் கட்சி என்ற ரீதியில் எடுத்த அரசியல் தீர்மானங்களுக்கு எதிராக செயற்பட்டு தற்போது கட்சியின் முக்கிய பதவிகளை வகிக்கும் நபர்களை பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தெரிவின் போது ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்திருந்தது.
எனினும், பேராசிரியர் ஜி. எல். பீரிஸ், டலஸ் அழகப்பெரும உள்ளிட்ட சிலர் இதற்கு எதிராக செயற்பட்டிருந்தனர் என்பதுக் குறிப்பிடத்தக்கது.