பரிசோதனைகள் முறையாக மேற்கொள்ளப்பட்டால், நாளாந்தம் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
புதிய ஓமிக்ரான் திரிபு குறிப்பிடத்தக்க அளவில் பரவியுள்ளதால், பூஸ்டர் டோஸ்களை விரைவில் பெற்றுக்கொள்ளுமாறும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கதின் தலைவர் உபுல் ரோஹன பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.
இந்த நோய் சிறுவர்கள் மத்தியில் மிக வேகமாக பரவி வருவதாக தெரிவித்த அவர், சிறிய அறிகுறி தென்பட்டால், அவர்களை வீட்டில் தனிமைப்படுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதேவேளை, நோயாளர்களை தங்க வைப்பதற்காண தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்கள் எதுவும் தற்போது இயங்கவில்லை என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், பெரும்பாலானவர்கள் தடுப்பூசியை செலுத்தியிருப்பதனால் அவர்கள் வீட்டிலேயே தம்மை தாமே தனிமைப்படுத்திக்கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா நோயாளர்களுக்கான தனிமைப்படுத்தல் நிலையங்கள் இயங்காவிட்டாலும், மற்றுமொரு தொற்று நோய் ஏற்பட்டால், அதற்காக நிலையங்கள் திறக்கப்படும் என ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.