• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஆசியா
ஆப்கானிஸ்தானில் பருவகால மழையினால் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கில் இதுவரை 182பேர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தானில் பருவகால மழையினால் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கில் இதுவரை 182பேர் உயிரிழப்பு!

Anoj by Anoj
2022/08/26
in ஆசியா, உலகம்
69 0
A A
0
30
SHARES
989
VIEWS
Share on FacebookShare on Twitter

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஆளும் தலிபான்களின் கூற்றுப்படி, ஆப்கானிஸ்தானில் பருவகால மழையினால் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கில், ஒரு மாதத்தில் குறைந்தது 182பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் திடீர் வெள்ளத்தின் விளைவாக 250க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

அதே நேரத்தில் 3,000க்கும் மேற்பட்ட வீடுகள் அழிக்கப்பட்டன அல்லது சேதமடைந்துள்ளதாக, தலிபானின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹூல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒகஸ்ட் 16 முதல் 21ஆம் திகதி வரையிலான காலக்கட்டத்தில், 63பேர் திடீர் வெள்ளத்தில் உயிரிழந்தனர். மேலும் 30 பேர் காணாமல் போயுள்ளதாகவும், 13 மாகாணங்களில் 8,200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்புக்கான ஐ.நா அலுவலகம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் கிழக்கு லோகார் மாகாணத்தில், குஷி மாவட்டத்தில் உள்ள கிராம மக்கள், அப்பகுதியின் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வெள்ளத்தில் பாதிக்கப்பட்டனர்.

இந்த வெள்ளத்தால், விலங்குகள், வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து அங்கிருந்த மக்கள் மலைகளில் தஞ்சம் அடைய மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.

ஆப்கானிஸ்தானின் 34 மாகாணங்களில் எதிர்வரும் நாட்களில் அதிக மழை பெய்யும் என்று உள்ளூர் வானிலை துறை எச்சரித்துள்ளது. நாடு முழுவதும் பெய்த கனமழை மற்றும் திடீர் வெள்ளத்தில் ஜூலை மாதத்தில் 40 பேரும் அதற்கு முந்தைய மாதத்தில் 19 பேரும் உயிரிழந்தனர்.

Related

Tags: ஆளும் தலிபான்கள்ஐக்கிய நாடுகள் சபைதலிபானின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹூல்லா முஜாஹித்னிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்புக்கான ஐ.நா அலுவலகம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் எச்சரிக்கை!

Next Post

நாடளாவிய ரீதியில் மீண்டும் கையெழுத்து வேட்டையை ஆரம்பிக்கின்றது கூட்டமைப்பு !

Related Posts

இந்தோனேசிய நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்வு!
உலகம்

இந்தோனேசிய நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்வு!

2026-08-16
அதிக எரிபொருள் விலையை ஏற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி ட்ரம்ப் வலியுறுத்தல்!
அமொிக்கா

அதிக எரிபொருள் விலையை ஏற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி ட்ரம்ப் வலியுறுத்தல்!

2026-08-15
இந்தோனேசிய நிலநடுக்கத்தில் 20 பேர் உயிரிழப்பு!
உலகம்

இந்தோனேசிய நிலநடுக்கத்தில் 20 பேர் உயிரிழப்பு!

2026-08-15
இந்தோனேஷியக் கடற்பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; இருவர் உயிரிழப்பு!
உலகம்

இந்தோனேஷியக் கடற்பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; இருவர் உயிரிழப்பு!

2026-08-15
ஜப்பானில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு: நால்வர் பலி; 7,000 பயணிகள் விமான நிலையத்தில் தவிப்பு!
உலகம்

ஜப்பானில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு: நால்வர் பலி; 7,000 பயணிகள் விமான நிலையத்தில் தவிப்பு!

2026-08-14
பிரான்சில் காட்டுத்தீயால் 1,100 ஹெக்டேர் நிலம் அழிந்தது!
உலகம்

பிரான்சில் காட்டுத்தீயால் 1,100 ஹெக்டேர் நிலம் அழிந்தது!

2026-08-14
Next Post
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும்  கூட்டமைப்புக்கும் இடையில் சந்திப்பு

நாடளாவிய ரீதியில் மீண்டும் கையெழுத்து வேட்டையை ஆரம்பிக்கின்றது கூட்டமைப்பு !

தென்னாபிரிக்கா அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து நிதான துடுப்பாட்டம்!

தென்னாபிரிக்கா அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து நிதான துடுப்பாட்டம்!

பயண ஆலோசனையை இரத்து செய்தது நோர்வே அரசாங்கம் !

பயண ஆலோசனையை இரத்து செய்தது நோர்வே அரசாங்கம் !

blank
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.