இலங்கையில் இருக்கும் இந்திய குடிமக்கள் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
புதுடெல்லியில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய போதே இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் அரிந்தம் பாக்சி இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.
இலங்கையில் இந்தியர்களின் பாதுகாப்பை பாதிக்கும் சம்பவங்கள் குறித்து இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் இலங்கையில் உள்ள உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளது.
இது தொடர்பாக இந்திய குடிமக்களுக்கு வழிகாட்டுதலை வழங்கியுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு வெளியே உள்ள இந்தியர்கள் சம்பந்தப்பட்ட எந்தவொரு விரும்பத்தகாத சம்பவத்தையும் தடுப்பதே இந்தியாவின் முயற்சி என்றும் பாக்சி குறிப்பிட்டுள்ளார்.