ஊதியம் தொடர்பான பிரச்சினையை சுட்டிக்காட்டி ஒரு இலட்சத்து 15 ஆயிரம் றோயல் மெயில் தபால் சேவை ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கம், தற்போதைய பணவீக்கத்தை பிரதிபலிக்கும் ஊதிய உயர்வை கோரியுள்ளது.
அதன்படி எதிர்வரும் 31 ஆம் திகதி, அடுத்த மாதம் 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட றோயல் மெயில் தபால் சேவை ஊழியர்கள் திட்டமிட்டுள்ளனர்.
வேலைநிறுத்த போராட்டம் இடம்பெறும் நாட்களில் கடிதங்கள் வழங்கப்படாது என்றும் சில பொதிகள் சேவைகள் தாமதமாகும் என்றும் றோயல் மெயில் நிறுவனம் எச்சரித்துள்ளது.
இதனால் ஏற்படும் சிரமங்களுக்கு வாடிக்கையாளர்களிடம் மன்னிப்புக் கேட்டுள்ள றோயல் மெயில் நிறுவனம் இடையூறுகளை குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.