அரசு ஓய்வூதியத்தை நம்பியிருக்கும் மக்கள் அடுத்த ஏப்ரல் மாதம் முதல் ஒரு நாளைக்கு 11 பவுண்டுகளை மட்டுமே பெறக் கூடியதாக இருக்கும் என முன்னணி தொண்டு நிறுவனம் எச்சரித்துள்ளது.
வயதானவர்களுடன் பணிபுரியும் முன்னணி தொண்டு நிறுவனம், இதுகுறித்து தீவிரமாக கவலைப்படுவதாகவும், அரசாங்கம் அவசரமாக நடவடிக்கை எடுக்கவும் அழைப்பு விடுத்துள்ளது.
2023-24ஆம் ஆண்டுகளுக்கு வீதங்கள் நிர்ணயிக்கப்படும் போது செப்டம்பரில் பணவீக்கம் 10.1 சதவீதமாக இருந்தால், அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் முழு மாநில ஓய்வூதியம் 10,600 பவுண்டுகளாக உயரும்.
ஆனால், கார்ன்வால் இன்சைட் என்ற ஆலோசனைக் குழுவானது வழக்கமான எரிசக்தி கட்டணமும் ஏப்ரல் மாதத்தில் 6,616 பவுண்டுகளாக உயரும் என்று கணித்துள்ளது.
அதாவது, எரிவாயு மற்றும் மின்சார செலவுகள் மாநில ஓய்வூதியத்தில் 62 சதவீதம் ஆகும், இதனால் வயதானவர்கள் உணவு, போக்குவரத்து மற்றும் பிற அத்தியாவசிய வாழ்க்கைச் செலவுகளுக்கு ஒரு நாளைக்கு 10.92 பவுண்டுகள் மட்டுமே செலவு செய்யக்கூடியதாக இருக்கும்.