ஈராக் பாதுகாப்புப் படையினருக்கும் சக்திவாய்ந்த ஷியா மதகுரு ஒருவரின் ஆதரவாளர்களுக்கும் இடையே நேற்று (திங்கட்கிழமை) இரவு முழுவதும் பாக்தாத்தில் நடந்த மோதலில் குறைந்தது 15பேர் உயிரிழந்துள்ளனர்.
முக்தாதா அல்-சதருக்கு விசுவாசமான எதிர்ப்பாளர்கள் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டதில் டஸன் கணக்கானவர்கள் காயமடைந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
சதர் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததை அடுத்து இந்த வன்முறை வெடித்தது.
ஈராக்கின் காபந்து பிரதமர் அமைதிக்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் பல நகரங்களில் அமைதியின்மை ஏற்பட்டதை அடுத்து இராணுவம் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை அறிவித்தது.
சமீப ஆண்டுகளில் ஈராக் தலைநகரைத் தாக்கிய மிக மோசமான வன்முறையாக இது பார்க்கப்படுகின்றது. பெரும்பாலான சண்டைகள் நகரின் பசுமை மண்டலத்தைச் சுற்றி பதிவாகியுள்ளன.
அதியுயர் பாதுகாப்பு பசுமை மண்டலப் பகுதியில், அரசாங்க கட்டடங்கள் மற்றும் வெளிநாட்டு தூதரகங்கள் அமைந்துள்ளன.