கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் சங்கிலி அபகரிப்பு மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
1.4 பில்லியன் அமெரிக்க டொலருக்கு நிலக்கரி கொள்முதல் செய்வதற்கான விலைமானுக்கோரல் நடைமுறைகளை மீறி வழங்கப்பட்டதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட மசகு எண்ணெயின் தரம் குறைவாக இருப்பதாகவும், அதில் ஊழல் நடந்திருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
போராட்டக்காரர்களைக் கையாளும் சூழலில் ஆயுதப் படைகள் மற்றும் பொலிஸ் உறுப்பினர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.