மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் நாட்டின் நிதி நிலைமை தொடர்பில் நாட்டையும் நாடாளுமன்றத்தையும் தவறாக வழிநடத்தியுள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இடைக்கால வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் கலந்துக்கொண்டு இன்று(02) உரையாற்றும் போதே ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.
எனவே தற்போதைய ஆளுநர் நந்தலால் வீரசிங்க நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு சென்றார் என குற்றஞ்சாட்டுவது அடிப்படையற்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தவறான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தால் பொருளாதார நெருக்கடிக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கைகள், கடன் மறுசீரமைப்பு உள்ளிட்ட அடிப்படை விடயங்களுக்கு அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க தீர்மானித்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கூறியுள்ளார்.
எனினும், அரசாங்கத்தின் செயற்பாடுகள் தங்களது தீர்மானத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு கடன் மறுசீரமைக்க மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் இடமளிக்கவில்லை.
பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்த காலப்பகுதியில் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க நாட்டில் இருக்கவில்லை.
எனவே தவறான விடயங்களை முன்வைத்து போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தால் பொருளாதார நெருக்கடிக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கூறியுள்ளார்.