காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்கு சொந்தமான காணியை இராணுவத்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று நாடாளுமன்றில் கவனத்திற்கு கொண்டுவந்தது.
யாழ்ப்பாணத்தில் 14000 பேருக்கும், கிளிநொச்சியில் 4000 பேருக்கு குடியிருக்க காணிகள் இல்லாத நிலையில், பளையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் குற்றம் சாட்டினார்.
இந்த காணிகளை குறிப்பிட்ட மக்களுக்கு வழங்குமாறு வடக்கு மாகாண ஆளுநர், கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலருக்கும் கடிதம் எழுதிய போதும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டினார்.
பலாலியில் தனியாரின் 3500 ஏக்கர் காணியிலும் வட்டக்கச்சியிலும் இலங்கை இராணுவம் தோட்டம் செய்கின்றது என சுட்டிக்காட்டிய சிறிதரன், இவர்களால் இலங்கையின் போஷாக்கு மட்டம் அதிகரிக்குமா என்றும் கேள்வியெழுப்பினார்.